ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை
தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த
லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம்
ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம்
தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு
வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்)
தகுதிகள்:
தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ்
தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம்
பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது
வரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250
செலுத்த வேண்டும்,
தேர்வுசெய்யப்படும் முறை: தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I ஜூன் 27 மற்றும் தாள் - II ஜூன் 28 ஆம் தேதி
நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர்
வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின்
அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022
மேலும் விவரங்கள் அறிய
http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில்
சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments