Do you know about Tamil scholar V. Subha Manickam? தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா
தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ள ஒரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம். கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, 'நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். அப்படி இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? நான் சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாகக் கூறினார். அவர்தாம் வ.சுப. மாணிக்கம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையில் தமிழ்வழிக் கல்வி இயக்கம்' என்னும் அமைப்பை நிறுவியவர்: தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழ்மொழியில் அமைவதற்கு ஆணை பிறப்பித்தவர்: அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தவர் வ.சுப.மாணிக்கம்.
சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் சிறந்தவர். தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களையும் இயற்றியவர். கட்டுரை, நாடகம், கவிதை, உரை,கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையாக விளங்கியவர். அவருடைய மறைவிற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு 'திருவள்ளுவர் விருது' வழங்கியது: 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்பித்தது.
ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும் ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்'
.jpg)
No comments