சாலைகளுக்கு நடுவே உள்ள கோடுகளுக்கான அர்த்தம் தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்
சாலைகளுக்கு நடுவே உள்ள கோடுகளுக்கான அர்த்தம் தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்
மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு: இது சாலையின் அடிப்படைக் குறியீடு ஆகும். இக் குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் (Lane) மாறலாம், வாகனங்களை முந்தி செல்லலாம் அல்லது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U- திருப்பத்தில் திரும்பலாம்.👇
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு: இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும். வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ, அனுமதியில்லை என்பதைக் குறிக்கின்றது. இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.👇
தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு: வெளிச்சம் (Visibility) குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.👇
இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்: ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தடம் மாறுவதை கண்டிப்பாகத் தடைசெய்கிறது. மேலும், நாம் நமது தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்திச் செல்லலாம்.👇
நிறுத்தக் கோடு: பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். அவை போக்குவரத்துச் சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கின்றது.👇
தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்: இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும் போது பிற வாகனங்களை முந்திச்செல்லலாம். ஆனால், தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும் போது பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது.👇







No comments